Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெற்றோரை பார்த்துக் கொள்ளாத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை

பெற்றோரை பார்த்துக் கொள்ளாத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை
, செவ்வாய், 17 ஜூலை 2018 (07:54 IST)
அமைச்சர் சரோஜா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பெற்றோரை பார்த்துக் கொள்ளாத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறியுள்ளார்.
இன்றைய நவீன காலக் கட்டங்களில் பெற்றோர் தங்களது குழந்தைகளை பெரும்பாடு பட்டு வளர்க்கின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு, வீட்டு வாடகை, கரண்ட் பில், மளிகை செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு என கஷ்டப்பட்டு தங்களது பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்குகின்றனர். ஒரு சில பிள்ளைகளோ நல்ல நிலைக்கு வந்த பின்னர், பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர். 
 
உலகில் நாம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒரே ஜீவன் நமது பெற்றோர் தான், ஆனால் அவர்களையும் சில பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது வேதனைக்குரியது.
 
இதனால் பல பெற்றோர்கள் மனமுடைந்து முதியோர் இல்லங்களில் மீத வாழ்க்கையை நரக வேதனையுடன் கழிக்கின்றனர். 
webdunia
இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சரோஜா இளைய சமுதாயத்தினர் தங்கள் பெற்றோர்களை அன்போடும், பரிவோடும் கவனித்துக்கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு பிள்ளைகளின் தலையான கடமை.
 
அதை விட்டுவிட்டு பெற்றோர்களை சிரமப்படுத்தி அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை