Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு!

தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு!
, சனி, 12 ஜனவரி 2013 (10:40 IST)
FILE
தமிழ் பேரறிஞர்கள், தலைவர்கள் பெயரால் வழங்கப்படும் தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்ணல் அம்பேத்கர் விருது இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ந.முருகனுக்கு திருவள்ளுவர் விருதும், டாக்டர்.சமரசத்துக்கு தந்தை பெரியார் விருதும், மணிமொழியனுக்கு பேரறிஞர் அண்ணா விருதும், சிங்காரவடிவேலுக்கு காமராசர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பாரதியார், பாரதிதாசன், கி.ஆ.பெ.விஸ்வநாதம், திரு.வி.க விருதுகளுக்கு தேர்வானவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். விருது பெறுவோருக்கு ரூ.1 லட்சம் காசோலையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படவுள்ளன.

முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. தேனியில் நடைபெறும் பென்னி குக் நினைவு மண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்குகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil