Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

Mahendran
சனி, 28 செப்டம்பர் 2024 (15:35 IST)
சென்னையில் தனியார் சுடுகாடு மற்றும் இடுகாடு அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
சென்னையில்  மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய தனியார் சுடுகாடுகள் அமைக்க அனுமதி வழங்க இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
தற்போது சென்னையில் 230 இடுகாடுகள் மற்றும் 42 சுடுகாடுகள் இருக்கும் நிலையில், தனியார் சுடுகாடுகள் மற்றும் இடுகாடுகள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 
 
மக்கள் குடியிருக்கும் பகுதி மற்றும் நீர்நிலைகளில் இருந்து 30 மீட்டர் தொலைவில் சுடுகாடு அமைக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நில உரிமையாளர்கள் ரூபாய் 25 ஆயிரம் செலுத்தி உரிமை பெற வேண்டும் என்றும், ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தனியார் சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் குடிநீர் வசதி, வாகனம் நிறுத்தும் இடம், சிசிடிவி கண்காணிப்பு, ஓய்விடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் என்றும், நாய் உள்ளிட்ட விலங்குகள் நுழையாமல் தடுக்க, சுற்றுச்வர் அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட சில வழிகாட்டி நெறிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
சென்னை மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், விரைவில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தம் கோரப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments