எனக்குப் பிறகு ஸ்டாலின் தான்-மனம் திறந்தார் கருணாநிதி!
, வியாழன், 3 ஜனவரி 2013 (15:57 IST)
கட்சியில் எனக்குப் பிறகு ஸ்டாலின் என் பணியை தொடர்வார் என்று கருணாநிதி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் பா.ம.கவினர் , தி.மு.க வில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பாமக வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் ஏராளமான பாமக வினர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி ''என் உயிர் உள்ளவரைக்கும் கட்சிக்காகப் பாடுபடுவேன் என்று கூறினார். அதன் பின் யார் பொறுப்பேற்பார்கள் என்ற கேள்விக்கு, ஸ்டாலினை நோக்கி எனக்குப் பிறகு ஸ்டாலின் என் பணியைத் தொடர்ந்து செய்வார் '' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதியின் இப்பேச்சு திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்டாலின் கட்சியின் தலைவராக மு.க.அழகிரி எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கருணாநிதியின் பேச்சு அழகிரி தரப்பினருக்கு அதிருப்தியை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் கழகத்தின் மூத்த உறுப்பினர்களையும் கருணாநிதியின் பேச்சு அதிரவைத்துள்ளது.