Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிப்மரில் வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (07:48 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது என்பதும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான சேர்க்கை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் பள்ளிக்கு ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அட்மிஷன் பணிகளை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் வெகு விரைவில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த நிலையில் புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புதுவை, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்கள், பி.எஸ்.சி. நர்சிங் முதல், 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள், பி.எஸ்.சி. துணை மருத்துவ மாணவர்களுக்கு வருகிற 1-ந்தேதி (ஜூலை) வகுப்புகள் தொடங்கும் என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எம்.பி.பி.எஸ். 2.ம் ஆண்டு, 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் தேதி தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments