Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளை கட்டிப்பிடித்தது தவறில்லை: சிவசங்கர் பாபாவுக்கு வக்காலத்து வாங்கும் ஆசிரியைகள்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (07:41 IST)
மாணவிகளை கட்டிப்பிடித்தது தவறில்லை: சிவசங்கர் பாபாவுக்கு வக்காலத்து வாங்கும் ஆசிரியைகள்
மாணவிகளை கட்டிப்பிடித்தது மாணவிகளை தொட்டு ஆசீர்வாதம் செய்தது தவறான செயல் இல்லை என சிவசங்கர் பாபாவுக்கு மூன்று ஆசிரியைகள் வக்காலத்து வாங்கி பேட்டி அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மாணவிகள் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு காரணமாக சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று சிவசங்கர் பாபா நடத்தி வரும் பள்ளியில் 3 ஆசிரியைகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாணவிகளை பாபா கட்டியணைத்து முத்தமிட்டது தவறில்லை என்றும் அவர் தவறான நோக்கத்தில் எதையும் செய்ய மாட்டார் என்றும் மாணவிகளை ஆசீர்வதிக்கவே அவர் கட்டி பிடித்து உள்ளார் என்றும் கூறினார் 
 
மேலும் பள்ளி வளாகத்தில் எந்த விதமான பாலியல் அத்துமீறல்களும் நடைபெறவில்லை என்றும் மாணவிகளை கட்டிப்பிடிப்பது ஆசி வழங்குவது எல்லாம் அவர் நடத்திவரும் ஆசிரமத்தில் தான் நடக்கும் என்றும் கூறினார். மேலும் பெற்றோர் முன்னிலையில்தான் மாணவிகளை அவர் கட்டிப்பிடித்து ஆசீர்வதிப்பார் என்றும் அவர்கள் தெரிவித்தனர் இந்த மூன்று ஆசிரியைகளின் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்