பள்ளி வரும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 மாத்திரைகள்: தமிழக அரசு உத்தரவு!

Webdunia
வியாழன், 14 ஜனவரி 2021 (09:24 IST)
பள்ளி வரும் ஒவ்வொரு மாணவருக்கும் 20 மாத்திரைகள்
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதல் கட்டமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கும் என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது 
 
மேலும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியுடன் வகுப்பறையில் உட்கார வேண்டும் என்றும் தமிழக அரசு நெறிமுறைகள் ஆக நேற்று அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி மாணவர்களை பள்ளிக்கு வரும் வரை வரும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்கு வரலாம் அல்லது ஆன்லைன் மூலம் கற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தலா 10 மல்டிவிட்டமின் மாத்திரை மற்றும் 10 ஜிங்க் மாத்திரை வழங்கவும் அதை மாவட்டங்களில் உள்ள வேர்ஹவுசில் இருந்து பெற்று பள்ளிகளுக்கு வினியோகம் செய்யவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவால் பள்ளிக்கு வரும் ஒவ்வொரு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளும் 10 ஜிங்க் மாத்திரைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments