Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பாக ஸஹர் ரமலான் உணவு விநியோகிக்கும்!

ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பாக ஸஹர் ரமலான் உணவு விநியோகிக்கும்!
, புதன், 29 மார்ச் 2023 (15:32 IST)
ஆதரவற்ற ஏழை மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பாக துவங்கப்பட்டுள்ள   அணையா அடுப்பு எனும் சமுதாய சமையற்கூடத்தில்,ரமலான் மாத காலை உணவான ஸஹர் உணவை விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் ஆதரவில்லாமல் உயிரிழந்த உடல்களை அடக்கம் செய்வது,இலவச ஆம்புலன்ஸ் சேவை,என  பல்வேறு சமூக  சேவை பணிகளை கடந்த பதினைந்து வருடங்களாக  செய்து வருகின்றனர்.
 
கடந்த வாரம்  அணையா அடுப்பு எனும்  சமுதாய சமையற்கூடத்தை துவக்கி அதன் வாயிலாக கோவை அரசு மருத்துவமனை,இரயில் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டத்தை செயல் படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம் ஜான் நோன்பு துவங்கியதை தொடர்ந்து இன்னும் கூடுதலாக, இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பதற்கு முன்னதாக உட்கொள்ளும் ஸஹர் உணவான காலை உணவை வழங்கும் பணியை துவங்கி உள்ளனர்.
 
இந்நிலையில் இதற்கான பணிகளை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிறுவனர் சலீம் மற்றும் நிர்வாகிகளை பாராட்டினார்.
 
தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வெளி மாநிலம்,மற்றும் வெளியூர்களில் இருந்து கோவையில் இஸ்லாமியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வசித்து வருவதாகவும்,இதில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பை கருத்தில் கொண்டு அணையா அடுப்பின் வாயிலாக ஸஹர் உணவை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று வழங்குவது உள்ளபடியே பாராட்டுக்குரியது என புகழாரம் சூட்டினார். 
 
கரும்புகடை சேரன் நகர் பகுதியில்,ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அணையா அடுப்பு துவங்கியுள்ள நிலையில்,அதே பகுதியில் புற்றுநோய் நல மையத்திற்கான பணிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10ஆம் வகுப்பு பிராக்டிக்கல் தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்.? அதிர்ச்சி தகவல்..!