தர்மபுரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயத்திற்குச் சென்ற அண்ணாமலையை வாலிபர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று 2 வது நாளாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர், பி. பள்ளிப்பட்டியில் உள்ள புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்குச் சென்றார்.
அங்கிருந்த கிறிஸ்தவ வாலிபர்கள் அண்ணாமலையை ஆலயத்திற்குள் வரக்கூடாது என்றும் மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்களை வெளியேற்றினர். அதன்பின்னர், அண்ணாமலை ஆலயத்திற்குள் சென்று மாதா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.