சென்னை அருகே ஜாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை அவர் திருமணம் செய்த பெண்ணின் அண்ணன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 ஆம் நூற்றாண்டில் ஜாதி மறுப்பு திருமணம் அதிகமாக நடந்து வரும் நிலையில் சமூக நீதி நிலைநாட்டப்படுவதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் சில இடங்களில் இன்னும் ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜாதி மறுப்பு திருமணம் செய்த நிலையில் அவர் பெண்ணின் அண்ணனால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கரணையை சேர்ந்த இளைஞர் பிரவீன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஷர்மி என்பவரை திருமணம் செய்த நிலையில் ஷர்மியின் அண்ணன் தினேஷ் என்பவர் பிரவீனை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இந்த கொலை சம்பந்தமாக பெண்ணின் அண்ணன் தினேஷ் உட்பட நான்கு பேர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.