Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் வீலிங் செய்து வீடியோ பதிவேற்றிய இளைஞர் கைது

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (17:31 IST)
ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்  பைக் வீலிங் செய்தாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். அவரது லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து,  திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன்  உள்ளிட்ட சிலரை போலீஸார்  தேடி வருவதாக தகவல் வெளியான  நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 13  பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களில் 7 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் இளைஞர்கள் மீது புகாரளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் லைக்ஸ் பெறுவதற்காக செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்து வீடியோ பதிவேற்றிய இளைஞர் கோகுலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு அடுத்துள்ள மல்ராசாபுரத்தைச் சேர்ந்த ஓட்டுனர் உரிமம் இல்லை என்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments