Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைனர் பெண்ணைக் கடத்திச் சென்ற இளைஞர் – மூன்று நாட்கள் கழித்து பிடித்த போலிஸ்!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (08:08 IST)
சென்னையில் துணிக்கடையில் வேலை செய்து வந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்காததால் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது மற்றொரு துணிக்கடையில் பணியாற்றி வந்த யுவ்ராஜ் என்ற இளைஞர் அந்த பெண்ணை பாலோ செய்துவந்ததாக சொல்லப்படுகிறது. சிறுமியிடமும் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு முதலில் மறுத்த சிறுமி, பின்னர் அவர் திருமணம் செய்துகொள்வதாக சொன்னதும் அதற்கு ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுமியை காணவில்லை என பெற்றோர் போலிஸில் புகார் கொடுக்க, மூன்று நாட்கள் விசாரணைக்குப் பிறகு கொருக்குப்பேட்டை ராஜீவ் காந்தி நகரில் இளைஞர் யுவராஜ் உடன் சிறுமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியைக் காப்பாற்றிய போலீஸார், அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்