Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம் வாலிபர் பிளேடால் அறுத்து பலி: கொலையா? தற்கொலையா ?

Advertiesment
இளம் வாலிபர் பிளேடால் அறுத்து பலி:  கொலையா? தற்கொலையா ?
, புதன், 6 ஜூலை 2016 (16:05 IST)
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள புஞ்சைப் புகளூர் பகுதியை அடுத்த கொளரி புரம் பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன், இவரது மகன் கார்த்திக் (வயது 27).


 

 
இவர் அதே பகுதியில் உள்ள புகளூர் சர்க்கரை ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செவ்வாய் கிழமையான நேற்று  காலையில் கார்த்திக்கின் தந்தை, தாய், அக்கா ஆகிய மூவரும் தஞ்சை கோயிலுக்கு சென்று இன்று காலை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். 
 
எனவே, செல்போனை யாரும் எடுக்காததால் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு போன் செய்ததையடுத்து அவர்கள் வீட்டினை உடைத்து பார்த்த போது, அங்கு கார்த்திக் கை, கால், முகம், கழுத்து ஆகியவற்றில் இரத்த காயத்துடன் உயிரிழந்தது தெரியவந்தது. 
 
இதையடுத்து கார்த்திக்கின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்த பின்னர் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக்கின் பிரேதத்தை போலீஸார் கைப்பற்றி அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 
இந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் பிளேடால் கழுத்து, கைகள், கால்கள் வெட்டி காணப்பட்டதையடுத்து இது தற்கொலையா அல்லது  கொலையா என்று அரவக்குறிச்சி துணை காவல்துறை கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.   
 
சி.ஆனந்தகுமார் – செய்தியாளர் – கரூர் மாவட்டம் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாயை பிளந்து பார்க்க வைக்கும் நரியின் அசத்தல் வேட்டை (வீடியோ)