சீனா ஜப்பான் போன்ற நாடுகளில் பல வருடங்களாகவே மெட்ரோ ரயில் வசதி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டை பொருத்தவரை சில வருடங்களுக்கு முன்புதான் சென்னையில் மெட்ரோ ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. விமான நிலையத்திலிருந்து செண்ட்ரலுக்கு சாதாரண ரயிலில் செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகும் என்றால் மெட்ரோ ரயிலில் அரை மணி நேரத்தில் சென்று விடலாம். கொஞ்சம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பார்கள் அவ்வளவுதான்.. மெட்ரோவில் ஏசி வசதியோடு ஜாலியாக பயணிக்கலாம்.
எனவே சென்னையில் பெரும்பாலானவர்கள் மெட்ரோ ரயில் வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். மெட்ரோ ரயிலை பொறுத்தவரை முதலில் டிக்கெட்டை வாங்கிக் கொண்ட பின்புதான் பயணிக்க முடியும். இந்நிலையில்தான் சென்னை கோயம்பேட்டில் டிக்கெட் எடுக்காமலேயே ஒரு இளைஞர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து டிக்கெட் பரிசோதகர்களிடம் கையும் களவுமாக சிக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
மெட்ரோ அதிகாரிகளிடம் பிடிபட்டவுடன் அந்த இளைஞர் ஐயா என்ன மன்னிச்சிடுங்க.. தெரியாம பண்ணிட்டேன்.. என்னை விட்டுடுங்க விட்டுடுங்க என கெஞ்சிய படி அவர்களின் காலில் விழும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதத்ளங்களில் வைரலாகி வருகிறது.
Video Courtesy to Polimer news