Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே- முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (19:32 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் இன்று  நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், ‘’எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...’’என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் தேமுதிக  நிறுவனருமான விஜயகாந்த்  நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது மறைவு சினிமாவுக்கும், அரசியலுக்கும் பேரிழப்பு என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் இருந்து இன்று விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தனப் பேழையில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

‘’எங்கள் இதயங்களில் நிரந்தரமாக வாழ்வீர்கள் நண்பரே...’’என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வெளியிடுள்ளதாவது: ''உடல்நலக்குறைவால் காலமான தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்'' என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், இந்த இறுதி  நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரளாய்க் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments