Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் ஸ்டேஷன் போனா உயிரோட வர முடியாது.. திமுக ஆட்சி இப்படிதான்! - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

Prasanth K
ஞாயிறு, 29 ஜூன் 2025 (12:58 IST)

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே திருட்டு வழக்கில் விசாரணைக்கு போலீஸால் அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த காவல் நிலைய கஸ்டடி மரணம் குறித்து பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்ததாக தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் தற்காலிக ஊழியர் திரு. அஜித்குமாரை விசாரணை எனும் போர்வையில் அழைத்துச் சென்று, 7 காவலர்கள் இணைந்து 2 நாட்களாக அடித்துத் துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக உறவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இது லாக்-அப் மரணமோ என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது. 

 

கடந்த வாரம் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க வந்த கர்ப்பிணி உட்பட மூன்று பெண்களை காவலர் தாக்கிய நிலையில், தற்போது தன்னையும் தன் சகோதரரையும் வண்டியில் அழைத்து செல்லும் வேளையிலும் பின்னால் கயிறு கட்டி தாக்கியதாக உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் வாக்குமூலம் அளித்திருப்பது காவல்துறையின் அதிகரித்துவரும் குரூரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

 

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், உடனடியாக இவ்விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி, உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் சர்ச்சையை பேசப்போகும் விஜய்? அந்த கட்சி பற்றி மட்டும் மௌனமா?

நீ அரியணை ஏறும் நாள் உன் தொண்டர்களுக்கு திருநாள்! - மகனை வாழ்த்தி ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சி!

நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி நாளில் முக்கிய மசோதா தாக்கல் செய்வதா? கனிமொழி எம்பி கண்டனம்..!

உபியில் உள்ள முக்கிய நகரின் பெயர் பரசுராம்புரி என மாற்றம்.. உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.!

ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. புதிய முதலீடு வருமா?

அடுத்த கட்டுரையில்