Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran
வியாழன், 7 நவம்பர் 2024 (15:29 IST)
நாளை 13 மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாகவும் வங்கக்கடலில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாகவும், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை மற்றும் மிக கன மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில், நாளை கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
 
அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் ஏழு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல், அதாவது நவம்பர் 7 முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை மழை தொடரும் என்றும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

சீமானுக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினால் தேடிச் சென்று அடிப்போம்: நாதக நிர்வாகிகள்

இப்படி பண்ணிட்டீங்களே மணி சார்? உயிரே க்ளைமேக்ஸ் இது இல்ல! - உண்மையை உடைத்த மனிஷா கொய்ராலா!

ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்! அடுத்தடுத்து குறி வைக்கப்படும் ‘கான்’ நடிகர்கள்! - பாலிவுட்டில் அதிர்ச்சி!

அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் அதிபர் ஆவதால் இந்தியா சந்திக்கப் போகும் சிக்கல்கள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments