யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிப்பு: மாமல்லபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (14:16 IST)
நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
 
நடிகை யாஷிகா நேற்று முன்தினம் நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கார் அதிவேகமாக ஓட்டிக்கொண்டு சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இந்த விபத்தில் காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி என்பவர் சீட்பெல்ட் அணியாததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் 
 
யாஷிகாவிற்கும் இடுப்பு எலும்பு மற்றும் வலது கால் எலும்பு முறிந்து விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகாவிடம் போலீசார் ஏற்கனவே விசாரணை செய்த நிலையில் தற்போது அதிரடியாக அவரது ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து அவர் எந்த வாகனத்தையும் இனி ஓட்ட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments