Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல் லாரிகளை பிடித்து வைத்து உணவு பாதுகாப்புத்துறை போலீஸார்

நெல் லாரிகளை பிடித்து வைத்து உணவு பாதுகாப்புத்துறை போலீஸார்
, செவ்வாய், 20 ஜூலை 2021 (23:08 IST)
மாவட்டம் விட்டு மாவட்டம் நெல் கொண்டு வரக்கூடாது என்றும் அரசு நெல் குடோனுக்கு திருச்சி, தஞ்சையிலிருந்து கொண்டு வந்த நெல் லாரிகளை பிடித்து வைத்து உணவு பாதுகாப்புத்துறை போலீஸார் மீது அதிர்ப்தி நெல் விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு – தமிழ்நாடு அரசு நுகர்பொருள்வாணிபக்கழகத்தின் முன்னர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு.
 
 
திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆந்திரா நெல்கள் சாகுபடி செய்யப்பட்டு, சுமார் 20 விவசாயிகள் ஒன்றிணைந்து லாரிகள் மூலம் இந்த நெல்களை தாராபுரம் பகுதியில் அரைத்து பின்பு விற்கப்பட்டு வருகின்றது. பின்னர் இந்த அரிசியானது மூட்டை, மூட்டைகளாக திருப்பூர், ஈரோடு, தாராபுரம், கரூர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், லாரிகளில் நேற்றிரவு வந்த 2 லாரிகளை கரூர் அடுத்த சுக்காலியூர் செக்போஸ்ட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த உணவு பாதுகாப்புத்துறை போலீஸார் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் இந்த லாரிகள் கரூர் அடுத்த தொழிற்பேட்டை, அரசு நெல் குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து, பாதிக்கப்பட்ட சுமார் 20 க்கும் மேற்பட்டோர், தொழிற்பேட்டை தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்பு ஒன்றிணைந்து நீதி கிடைக்கும் வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டுமென்றும், நல்ல விலைக்கு தங்களது நெல்லை விற்றுத்தரவேண்டுமென்றும் உரிய ஆவணங்களுடன் லாரியில் எடுத்துச் செல்லும் நெல் மூட்டைகளையும் உடனடியாக விடுவிக்க கூறியும் , மற்ற மாவட்டங்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரிகள் கட்டப்பட்டு, உரிய அனுமதி பெற்று கோர்ட் ஆர்டர் வழங்கப்பட்ட பின்னர்,  எடுத்து செல்லும் நெல் மூட்டைகள் அடங்கிய லாரிகளை திடீரென்று மடக்கி பிடிப்பது என்பது எப்படி என்றும், இது குறித்து தமிழக முதல்வர் வரை சென்று ஒட்டு மொத்த வணிகர்கள் மற்றும் நெல் விவசாயிகள் என்று அனைவரும் சேர்ந்து மாபெரும் போராட்டம் நடத்தும் அளவிற்கு கரூர் உணவு பாதுகாப்புத்துறை போலீஸார் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படுவதாக கூறி, அதற்கான உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டும் எடுத்து செல்ல அனுமதி இல்லை என்பது விவசாய பொருட்களையும், விவசாயத்தினையும், விவசாயத்தினை நம்பியுள்ள வியாபாரிகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆகவே தொழிற்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெல் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள், தங்களது நியாயமான கோரிக்கைக்கும், நியாயம் இல்லாத உணவுபாதுகாப்புத்துறை போலீஸாரின் இந்த நடவடிக்கையால் சுமார் 850 மூட்டை ஆந்திரா பொன்னி நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. இதனை உரிய நேரத்தில் அரைக்க விட்டால், அப்புறம் விணாகி விடும் என்பதினால், சுமார் 8 லட்சம் மதிப்பிலான நெல்லை காத்து அதை மீண்டும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விண்வெளியில் அமேசான் தலைவர் !