Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”எனது கணவரே செய்திருந்தாலும் தவறுதான்” - மதனின் மனைவி கண்ணீர்

”எனது கணவரே செய்திருந்தாலும் தவறுதான்” - மதனின் மனைவி கண்ணீர்
, வியாழன், 24 நவம்பர் 2016 (16:05 IST)
சட்டம் தன் கடமையை செய்யட்டும். எனது கணவரே தவறு செய்திருந்தாலும் தவறுதான் என்று மதனின் இரண்டாவது மனைவி சுமலதா கூறியுள்ளார்.


 

சென்னையில், எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்தது.

இதனையடுத்து, கடந்த மே மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார். இதனால் அவரை கண்டுபிடித்துதரக் கோரி அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் காவல்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்தனர்.

மேலும், வேந்தர் மூவிஸ் மதன் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரக்கோரியும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், மதனை திருப்பூர், பூண்டியில் உள்ள வீடு ஒன்றிலை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், மதனின் மனைவி சுமலதா மற்றும் மதனின் தாய் தங்கம் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, சுமலதா கூறும் போது, ”திருப்பூர் வர்ஷா எனது உறவுக்கார பெண் தான். அவரது வீட்டில் எனது கணவர் மதன் இருந்தது எங்களுக்கு தெரியாது. இந்த வி‌ஷயத்தில் சட்டம் தன் கடமையை செய்யட்டும். எனது கணவரே தவறு செய்திருந்தாலும் தவறுதான்” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரணகளத்திலும் கிளுகிளுப்பு ; கலாய்த்த எம்.பி - வாய் விட்டு சிரித்த மோடி (வீடியோ)