Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம்? - கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு

எஸ்.வி.சேகருக்கு அடைக்கலம்? - கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு
, செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (16:51 IST)
நடிகரும், பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகருக்கு தமிழக தலைமை செயலரான கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் கொடுத்திருப்பதாக் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 
நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு பத்திரிகையாளர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்ததால் பின்னர் அந்த முகநூல் பதிவை நீக்கிவிட்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.இருப்பினும் எஸ்.வி.சேகருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை பத்திரிகையாளர்கள் நடத்தினர். 
 
தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் காவல்துறையில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் எஸ்.வி.சேகர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டது. அந்நிலையில், அவர் தலைமறைவாகி விட்டார் என்ற செய்தி வெளியானது. 
 
ஆனால், தான் தலைமறைவாகவில்லை என்றும் பெங்களூரில் இருப்பதாகவும் இன்னும் மூன்று தினங்களில் சென்னை வரவுள்ளதாகவும் எஸ்.வி.சேகர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.
 
அவரது சகோதரரின் மனைவியும், தலைமை செயலாளருமான கிரிஜா வைத்தியநாதனின் ஆதரவிலேயே அவர் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி பழனிச்சாமி என்ன ஏழுமலையானா? - ராமதாஸ் காட்டம்