Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்யுத்த வீரர்கள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம்

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (22:49 IST)
பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென மல்யுத்த வீரர்கள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்திய மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகட் மற்றும் ஆக்ஷி மாலிக் ஆகியோர் பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஜன் சரண் சிங் மற்றும் பயிற்சியாளர்கள் அமைப்பு நிர்வாகிகள் பாலியல் தொல்லை செய்வதாக புகார் தெரிவித்து, நேற்று முன் தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று 2 வது நாளாக மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒழும்பிக் சங்கம் அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், டோலா பானர்ஜி, யோகேஸ்வர் தத். அலாக் நந்தா அசோக் ஆகியோருடன் 2 வக்கறிஞர்களும் இடம்பெற்றுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்