கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- புன்னம்சத்திரம் சாலையிலுள்ள அண்ணாநகரில் உள்ள அப்பகுதி பொதுமக்கள் சிலர் தார் சாலையின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தில் புதிதாக விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து செய்தனர்.
இந்நிலையில் விநாயகர் சிலை இருந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் விநாயகர் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயுதம் பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து புகளூர் தாசில்தாரிடம் தகவல் தெரிவித்தனர்.அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி புகளூர் தாசில்தார் மதிவாணன் தலைமையிலான வருவாய்த்துறையினர் அங்கு புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை எடுத்து சென்று விட்டனர். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் விநாயகர் சிலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேலாயுதம்பாளையம்- புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ் செல்வன் தலைமையில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர் .அப்போது இங்கிருந்து எடுக்கப்பட்ட விநாயகர் சிலையை இருந்த இடத்தில் வைத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிட ப்படும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த தலித் பாண்டியன், புகழூர் நகராட்சி கவுன்சிலர் சுரேஷ் உட்பட சுமார் 60க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனத்தில் ஏற்றி புகலூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள அம்மா திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெயிலில் சாலைமறியலில் ஈடுபட்டதால் இரு பெண்கள் திடீரென மயக்கம் அடைந்தனர். மயக்கமடைந்த இரு பெண்களையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஒருவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து வந்து தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். உடனடியாக அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கிக் கொண்டனர்.சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக புகலூர் காகித ஆலை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற ஏராளமான லாரிகள், அரசுப் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள், கார்கள், வேன்கள் என இருபுறமும் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தன. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக