Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகப்புகழ் பெற்ற சூப்பர் ஹீரோக்களின் படைப்பாளி ஸ்டான்லீ காலமானார்.

உலகப்புகழ் பெற்ற சூப்பர் ஹீரோக்களின் படைப்பாளி ஸ்டான்லீ காலமானார்.
, செவ்வாய், 13 நவம்பர் 2018 (07:22 IST)
மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் அமெரிக்க எழுத்தாளரும் உலகப்புகழ் பெற்ற சூப்பர் ஹீரோக்களின் படைப்பாளியுமான ஸ்டான் லீ காலமானார். அவருக்கு வயது 95. 

அயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, பிளாக் பாந்தர், ஸ்பைடர் மேன், ஹல்க், எக்ஸ் மேன் உள்பட பல சூப்பர் ஹீரோக்களை காமிக்ஸ் புத்தகத்திலும் திரையிலும் உருவாக்கியவர் ஸ்டேன் லீ. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் காமிக்ஸ் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனனர்.

webdunia
அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரில் கடந்த 1922ஆம் ஆண்டு பிறந்த ஸ்டேன்லீ, கடந்த 1961 ஆம் ஆண்டு 'பேன்டாஸ்டிக் போர்' என்ற முதல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கினார். இதற்கு ஜேக் கிர்பி என்பவர் உறுதுணையாக இருந்தார். இந்த ஹீரோக்கள் மக்களை பெரும் அளவில் கவர்ந்ததால் அதன் பின்னர் ஸ்பைடர் மேன், பிளாக் பாந்தர், ஹல்க் உள்ளிட்ட பல காமிக்ஸ்க ஹீரோக்களை உருவாக்கி உலகப்புகழ் பெற்றார். இந்த இந்த காமிக்ஸ் ஹீரோக்கள் திரையில் தோன்றும்போது அந்த படங்களில் பணிபுரிந்ததோடு, சிறப்பு தோற்றத்திலும் நடித்தார். ஸ்டேன்லி மறைவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உச்சநீதி மன்ற தீர்ப்பால் பட்டாசு ஆலைகள் மூடல் –பல லட்சம் பேர் வேலை இழக்கும் பரிதாபம்!