Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலையும் இல்ல.. வாழ்வாதரமும் போச்சு! ஸ்டெர்லைட் ஆலையை திறக்குமாறு கிராம மக்கள் மனு

வேலையும் இல்ல.. வாழ்வாதரமும் போச்சு! ஸ்டெர்லைட் ஆலையை திறக்குமாறு கிராம மக்கள் மனு
, செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (14:42 IST)
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி மாவட்ட கலெக்டரிடம், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.


 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஆடசியர் சந்தீப்நந்தூரி  பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
 
அவர்கள் கொடுத்துள்ள மனுவில், ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரமும்  பாதிக்கப்பட்டு உள்ளது.
 
ஸ்டெர்லைட் ஆலையை நம்பி தூத்துக்குடியில் பல சிறிய தொழிற்சாலைகள் இயங்கி வந்தன. தற்போது ஆலை மூடப்பட்டதால் போதிய மூலப்பொருட்கள் கிடைக்காமல் மூடி கிடக்கின்றன. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக போராட்டகாரர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர்கள் அன்னிய சக்திகளின் கைகூலியாக செயல்படுகிறார்கள். ஆலையால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே  ஸ்டெர்லைட் தொழிற்சாலை நீதிமன்ற உத்தரவு படி உடனடியாக திறக்கப்பட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எத்தனை முறை சஸ்பெண்ட் ஆவார் இந்த இன்ஸ்பெக்டர்! லஞ்சம் வாங்கியதால் மீண்டும் சஸ்பெண்ட்