Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்கள் ஆராய்ச்சி செய்து பழக வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

Advertiesment
Women
, புதன், 13 மார்ச் 2019 (19:02 IST)
வரும் நாடாளுமன்ற சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் அதிமுக மெகா கூட்டணியில் தேமுதிக, பாஜக, தமாகா, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன .
சமீபத்தில் பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் மீதான வழக்கு சிபிசிஐடி க்கு மாற்றப்பட்டது. 
 
இதுகுறித்து தேமுதிக பொருளாளர் கூறியுள்ளதாவது:
 
''தமிழகத்தில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்தில் யாராக இருந்தாலும் உட்சபட்ச தண்டனை அளிக்க வேண்டும். பெண்கள் யாரிடம் பழகினாலும் ஆராய்ந்து பழக வேண்டும். இந்த வழக்கு சிபிஐக்கு மாறினாலும் கூட குற்றவாளிகள் மீது அதிக தண்டனை வழங்க வேண்டும். தற்போது சமூல வலைதளம் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருக்கின்றன.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எமனான சர்ஃப் எக்ஸல்...