Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவருடன் சண்டை போட்டு தாய் வீட்டுக்கு போகும் வழியில் இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (13:33 IST)
கணவருடன் சண்டை போட்டுவிட்டு இளம் பெண் ஒருவர் தனது தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவருடன் சண்டை போட்டுவிட்டு தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த  நான்கு பேர் தாய் வீட்டில் இறக்கி விடுவதாக கூறி காரில் ஏற்ற முயன்றனர்.

ஆனால் அந்த இளம் பெண் காரில் ஏற மறுக்கவே காரில் இருந்தவர்கள் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை வாயில் துணி வைத்து காருக்குள் தள்ளி உள்ளனர். மேலும் ஓடும் காரில் நான்கு பேரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.

 இதனை அடுத்து அந்த பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் இதை கூறியதும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் முதலில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளதாகவும் மற்றவர்கள்  பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது  

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை.! ரூ.10 லட்சம் அபராதம்.! சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் கட்டணங்களும் உயர்வு..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

அடுத்த கட்டுரையில்