Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 11 January 2025
webdunia

2 மனைவிகளுடன் வாழ்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்; முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட பரிதாபம்..!

Advertiesment
2  மனைவிகளுடன் வாழ்ந்த பிஎஸ்என்எல் ஊழியர்; முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட பரிதாபம்..!
, செவ்வாய், 26 டிசம்பர் 2023 (14:23 IST)
ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் பிஎஸ்என்எல் ஊழியர் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருச்சியை சேர்ந்த அண்ணாதுரை என்ற  பிஎஸ்என்எல் ஊழியர் ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென அண்ணாதுரை நேற்று குடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. வழக்கம் போல் போதையில் இருந்த அவர் முதல் மனைவியிடம் தகராறு செய்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த முதல் மனைவி தனது கணவனின் கழுத்தை நைலான் கயிற்றால் நெருக்கி கொலை செய்துள்ளார். 
 
தனது கணவரை கொலை செய்ததை அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் அவர் சொல்ல காவல்துறையினர் விரைந்து வந்து அவரை கைது செய்து அவருடைய கணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  
 
இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த பிஎஸ்என்எல் ஊழியர் போதை காரணமாக முதல் மனைவியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது - எடப்பாடி பழனிசாமி