Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் சென்னை மின்சார ரயிலில் பெண்களுக்கு அனுமதி: ஆனால் ஒரு நிபந்தனை!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (07:21 IST)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இருப்பினும் அதில் ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது குறிப்பாக பெண்களுக்கு அனுமதி சென்னை மின்சார ரயிலில் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது இன்று முதல் சென்னை மின்சார ரயிலில் பெண் பயணிகளுக்கு அனுமதி உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய நேரங்களில் பெண்கள் பயணிக்க அனுமதி இல்லை என்றும் சாதாரண நேரத்தில் மட்டுமே பெண்கள் பயணிக்க அனுமதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
சாதாரண நேரம் என்பது காலை 7 மணி வரையிலும், அதன் பின் காலை 10 மணி முதல் 4.30  மணி வரையிலும் அதன் பின் மாலை 7.30 மணிக்கு மேல் உள்ள வரை நேரங்களிலும் பெண்கள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதேபோல் இந்த நேரங்களில் மாதாந்திர பயணச்சீட்டு அல்லது சாதாரண பயணச்சீட்டு மூலம் பெண்கள்  மின்சார ரயிலில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் அம்மாவும் தூக்கு போட்டு தற்கொலை.. சோக சம்பவம்..!

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் வீச்சு.. சேலம் அருகே பரபரப்பு..!

நல்லவேளை இந்த அறிவுக்கொழுந்துகள் காமராஜர் காலத்தில் இல்லை!? - எடப்பாடியாரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

காலன் அழைக்கும் வரை கால்கல் ஓயவில்லை! 114 வயதான மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

விமானி அறைக்குள் நுழைய முயன்ற 2 பயணிகள்.. டெல்லி - மும்பை விமானத்தில் 7 மணி நேரம் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments