நேற்று அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும் அறிவித்து இருந்தார். அது மட்டுமின்றி பெண்கள் அர்ச்சகராக விரும்பினால் அவர்களுக்கு தனி பயிற்சி கொடுக்கப்படும் என்றும் பெண்களும் அர்ச்சகராகலாக நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
பெண்கள் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்புக்கு ஆகம விதிகளை பின்பற்றும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என்பதை தான் வரவேற்பதாக கூறியுள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
“பெண்கள் உட்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் முடிவை பாஜக வரவேற்கிறது, தெளிவான அறிவு, ஆகமவிதிகளைப் பற்றிய புரிதல் உள்ளவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்!