Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பலாத்காரம் செய்து கிணற்றில் வீசப்பட்ட பெண்கள்...நெஞ்சை உலுக்கும் கொலை

Webdunia
செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (19:53 IST)
தெலங்கானா மாநிலம்  யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பொம்மள ராமாராவ் மண்டலம் என்ற இடத்தில், சமீபத்தில் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர்  காணாமல் போனதாக மாணவியின் பெற்றோர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் துரிதமாக விசாரணை மேற்கொண்ட போது, அந்த  கிராமத்தைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவருக்குச் சொந்தமான  கிணற்றில் காணாமல் போன மாணவி சிராவனியின் புத்தகப்பை கிடந்துள்ளது. அதன் பின்னர் போலீஸார் கிணற்றில் இருந்து சிராவனியின் சடலத்தை சிரமத்துடன் எடுத்தனர்.
 
பின்னர் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மருத்துவ உடற்கூறு சோதனை முடிவில் மாணவி வன்புணர்வு செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது.
 
இதனையடுத்து சீனிவாசனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து போலீஸார் விசாரித்தனர். அப்பொழுது தான் மாணவியை வன்புணர்வு செய்து கொன்றதை ஒப்புக்கொண்டான்.
 
மேலும் போலீஸார் துருவித்துருவி அவனிடம் விசாரித்துபோது தான் ஏற்கனவே ஒரு பெண்ணைக் கொன்று இதே கிணற்றில் வீசியதையும் கூறியுள்ளான்.
 
அதன் பிறகு கிரேன் வரவழைத்து கிணற்றைத் தோண்டிப்பார்த்தனர். அதில் ஒரு மாணவியின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இது சில மாதங்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்ட மணீஷா என்ற பெண் என்று விசாரணையில் தெரியவந்தது.
 
இந்நிலையில் சீனிவாச ரெட்டியைக் கைதுசெய்த  போலீஸார் அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள கிணற்றை மூடமும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
 
இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments