Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலில் மயக்க மருந்து – கணவனைக் கொல்ல காதலுடன் சேர்ந்து போட்ட பிளான் !

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (11:18 IST)
நாமக்கல் அருகே தனது கணவருக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற பெண்ணைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள போதமலை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேசன். இவரது மனைவி பிரியா. தம்பதிகள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியாவுக்கு மல்லூர் பகுதியை சேர்ந்த கௌதம்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இந்த விஷயம் முருகேசனுக்குத் தெரிந்ததும் இது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் மற்றும் சண்டை நடந்துள்ளது. இதனால் காதலனோடு சேர்ந்து கணவனக்  கொலை செய்ய திட்டம் தீட்டினார் பிரியா. முருகேசனுக்குத் தூக்கமாத்திரை கலந்த பாலை குடிக்க கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து பிரியா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தாக்கியுள்ளார்.

ஆனால் மாத்திரை சரியாக வேலை செய்யாத்தால் முருகேசன் மயக்கம் தெளிந்த நிலையில் அங்கிருந்து தப்பித்து போலிஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் பிரியா மற்றும் கௌதம்ராஜை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

74 மணி நேர ED ரெய்டு முடிவு! கே.என்.நேரு சகோதரர் வீட்டில் சிக்கியது என்ன?

அதிகரிக்கும் சுற்றுலா கூட்டம்..! சென்னை - கன்னியாக்குமரி சிறப்பு ரயில் அறிவிப்பு!

மணமகள் தேடும் இளைஞர்களுக்கு இளம்பெண்களை விற்ற கும்பல்.. 1500 பெண்கள் விற்கப்பட்டார்களா?

ராமேஸ்வரம் பள்ளியில் AI ஆசிரியர்.. மாணவர்களின் கேள்விகளுக்கு அசத்தல் பதில்..!

தாய் உயிரிழப்பு.. தந்தை மருத்துவமனையில்.. மகள் திருமண தினத்தில் நடந்த சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments