Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பார்க்கில் தனியாக இருந்த காதல் ஜோடியிடம் போலிஸ் என சொல்லி… இளைஞர் செய்த அக்கிரமம்!

Advertiesment
பார்க்கில் தனியாக இருந்த காதல் ஜோடியிடம் போலிஸ் என சொல்லி… இளைஞர் செய்த அக்கிரமம்!
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:56 IST)
சென்னையை அடுத்த மணலியில் பார்க்கில் அமர்ந்திருந்த காதல் ஜோடியிடம் போலிஸ் என சொல்லி ஒரு இளைஞர் 15,000 பணம் உள்பட செல்போனையும் திருடிச் சென்றுள்ளார்.

மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள பூங்காவில் அமர்ந்து இருந்த அந்த காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்த நிலையில் அங்கு போலிஸ் சீருடையில் வந்த நபர், அந்த பெண்ணின் நண்பரை விரட்டிவிட்டு அவரிடம் பாலியல் அத்துமீறலாக நடந்து கொண்டது மட்டுமில்லாமல், 15, 000 ரூ பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்றுள்ளார். இதனால் அவர் போலிஸ் இல்லை என சந்தேகப்பட்ட அப்பெண் போலிஸாரிடம் புகார் கொடுக்க சென்றுள்ளார்.

போலிஸ் விசாரணையில் அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் பார்க்கில் வேறு ஒரு நபருடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்ததாகவும் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து திருடப்பட்ட செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி கேமராக்களின் உதவியோடு அந்த நபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அவர் டிக்கி மணி என்ற பிச்சை மணி என்பதும் தெரியவந்துள்ளது. தன் ஆஜாகுபாகுவான தோற்றத்தை பயன்படுத்தி தன்னை போலிஸ் என்றே பல இடங்களில் அறிமுகப்படுத்திக் கொண்டு இவ்வாறு முறைகேடுகளை செய்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த மாதமும் ஊரடங்கா? நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை