Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவிகளை கலங்கடித்த காவியா: கமலாலயத்தில் கலாட்டா!!

Advertiesment
காவிகளை கலங்கடித்த காவியா: கமலாலயத்தில் கலாட்டா!!
, வியாழன், 12 டிசம்பர் 2019 (13:17 IST)
தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நள்ளிரவு இளம்பெண் ஒருவர் புகுந்து ரகளையில் ஈடுப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தி.நகர் வைத்தியராம் தெருவில் பாஜவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இங்கு நள்ளிரவு இளம்பெண் ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அந்நேரத்தில் நிர்வாகிகள் யாரும் இல்லாததால் அந்த பெண்ணை அங்கிருந்து போகும் படி கூறியுள்ளனர். 
 
ஆனால், இதை கேட்காத அந்த பெண் வெளியே செல்லாமல் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மாம்பல போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இளம்பெண்ணை பிடித்து விசாரித்தனர். 
 
அப்போது, அந்த பெண் காவியா என்பதும், அவர் மனநிலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடியாரும், எகிப்து வெங்காயமும்! - நெகிழும் செல்லூர் ராஜூ