Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆவது வரை மட்டுமே படிப்பு… ஆனால் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து கல்லா கட்டிய பெண்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (17:46 IST)
திருச்சி மண்ணச்ச நல்லூர் பகுதியில் பெண்களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக கருக்கலைப்பு செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி, சித்தாம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயது திருமணம் ஆகாத பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததால் தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரது கர்ப்பப்பை நீக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்தது யார் என்ற விசாரணையில் மண்ணச்ச நல்லூரைச் சேர்ந்த ராஜலெட்சுமி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர் 10 ஆவது மட்டுமே படித்துள்ளார். அதன் பின் பெண் மருத்துவர் ஒருவரிடம் 10 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அந்த மருத்துவர் வெளிநாடு சென்ற பின்னர் தானே கிளினிக் திறந்து இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்புகளை செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணைக் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments