Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலிஸிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த நண்பர்கள்… இறுதியில் நடந்த விபரீதம்!

Webdunia
செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (17:37 IST)
அஸ்ஸாமில் போதை மருந்து பயன்படுத்தியவர்களை போலிஸார் கைது செய்ய முயன்ற போது ஆற்றில் குதித்த இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள நாகோன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தேபாசிஸ் தாஸ் என்ற இளைஞரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கோயிலில் அமர்ந்து போதைப் பொருளை நுகர்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த போலிஸார் அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். இதனால் இளைஞர்கள் அவர்களிடம் இருந்து தப்பிக்க அருகில் இருந்த நிஷாரி என்ற ஆற்றில் குதித்துள்ளனர்.

இதில் நான்கு இளைஞர்கள் மறுகரைக்கு வந்துவிட தேபாதிஸ் மட்டும் காணவில்லை. இதையடுத்து பொலிஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக என் டி ஆர் எஃப் மற்றும் எஸ் டி ஆர் எஃப் குழுக்கள் வரவழைக்கப்பட்டன. தீவிர தேடுதலுக்குப் பிறகு தேபாதிஸின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments