Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடரும் நிகழ்வுகள் : முதல்வர் நலம் பெற பால் குடம் எடுத்த பெண் பலி

தொடரும் நிகழ்வுகள் : முதல்வர் நலம் பெற பால் குடம் எடுத்த பெண் பலி

தொடரும் நிகழ்வுகள் : முதல்வர் நலம் பெற பால் குடம் எடுத்த பெண் பலி
, புதன், 26 அக்டோபர் 2016 (15:50 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற, சேலத்தில் பால் குடம் எடுத்த பெண் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி ஏராளமான கோவில்களில் யாகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். 
 
அப்பல்லோ மருத்துவமனை வாசலிலும் தொடர்ந்து பூஜை, யாகம் மற்றும் பிரார்த்தனைகள் அதிமுகவின் பல்வேறு பிரிவுகள் சார்பில் நடைபெற்று வருகிறது.
 
மேலும், பல இடங்களில் பெண்கள் பால் குடங்களை எடுத்துக் கொண்டு, ஊர்வலமாக செல்வது அதிகரித்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சேலம் மாவட்டம் நெய்காரப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில், ஏராளமான பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சில பெண்கள் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், உத்தமசோழபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண் மரணமடைந்தார்.
 
சமீபத்தில்தான், இதேபோல் திருவண்ணாமலையில் உள்ள ஒரு கோவிலில் பால்குடம் எடுத்த ஒரு கமலாம்பாள்(60) என்ற பெண்மணி மயங்கி விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.எப்.சி மீது ரூ.133 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!