”வாத்து காணாம போயிடுச்சு.. கண்டுபிடிச்சு கொடுங்க”.. போலீஸில் புகார் அளித்த பெண்மணி

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (19:56 IST)
ஈரோட்டில் ஒரு பெண், தனது தொழுவத்தில் உள்ள வாத்துகளை காணாமல் போய்விட்டன என போலீஸில் புகார் அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், ஆணைக்கல் பாளையத்தை சேர்ந்த பெண் கோமதி. இவர் தனது மாட்டுத் தொழுவத்தில் வாத்துகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுள்ளார் கோமதி.

வீடு திரும்பிய கோமதி, அவர் வளர்த்து வந்த வாத்துகளில் 2 காணாமல் போயுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோமதி, இது குறித்து ஈரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ”நான் மாட்டுத் தொழுவத்தில், ஆடு கோழிகளோடு வாத்துகளையும் வளர்த்து வருகிறேன். குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது, 2 வாத்துகளை யாரோ திருடிவிட்டார்கள், அந்த வாத்துகளை கண்டுபிடித்து தாருங்கள்” என கூறியுள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். வாத்து காணாமல் போய் விட்டது என போலீஸில் புகார் அளித்த சம்பவம் வேடிக்கையான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கொலைப் பசியில் தன் வாலை தானே விழுங்கிய பாம்பு...