Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உனக்கு முன்னாடியே நிறைய கல்யாணம் பண்ணிருக்கேன்! – மோசடி பெண்ணால் அதிர்ச்சியில் கணவன்!

Advertiesment
உனக்கு முன்னாடியே நிறைய கல்யாணம் பண்ணிருக்கேன்! – மோசடி பெண்ணால் அதிர்ச்சியில் கணவன்!
, புதன், 17 பிப்ரவரி 2021 (14:40 IST)
சமூக வலைதளம் மூலம் ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி ஏமாற்றிய பெண் குறித்து அவரது கணவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடியை சேர்ந்த இளைஞர் பாலகுரு. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரகபுநிஷா என்ற பெண்ணுடன் முகநூல் வாயிலாக பேசி வந்துள்ளார். இருவருக்குமிடையேயான பழக்கம் காதலாக மாறிய நிலையில் பாலகுரு இருவீட்டார் சம்மதத்துடன் ரகபுநிஷாவை திருமணம் செய்துள்ளார்.

பின்னர் இருவரும் சேந்தங்குடியில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் ரகபுநிஷா சமூக வலைதளங்கள் வாயிலாக வேறு சில ஆண்களுடனும் பேசி வந்துள்ளார். சமீபத்தில் இந்த விவரங்கள் தெரிய வர பாலகுரு இதை கேட்க இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

அப்போது ரகபுநிஷா தனக்கு இது புதிதில்லை என்றும், இதற்கு முன்னால் இதுபோல பலரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் பாலகுரு அதிர்ச்சியடைந்த நிலையில் பால்குருவிடமிருந்த 70 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு ரகபுநிஷா தப்பியுள்ளார். இதுகுறித்து ரகபுவின் தாய்க்கு பாலகுரு போன் செய்து கேட்கப்பட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்

இதுகுறித்து போலீஸில் புகார் அளித்து பாலகுரு மேலும் சிலரை ஏமாற்றும் முன்பு ரகபுநிஷாவை பிடிக்க வேண்டுமென போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி ட்விட்டரில் வாய்ஸ் மெசேஜும் அனுப்பலாம்! – புதிய சேவை தொடக்கம்!