Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அண்ணாநகர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. இளம்பெண் கைது..!

Mahendran
புதன், 22 ஜனவரி 2025 (15:44 IST)
சென்னை அண்ணா நகர் பகுதியில் மசாஜ் சென்டர் நடத்திய ஒரு இளம் பெண், அதில் பாலியல் தொழில் செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அதிரடியாக அந்த மசாஜ் சென்டர் சோதனை செய்யப்பட்டது. பெண் காவலர்கள் உட்பட தனிக்குழு மசாஜ் சென்டரில் சோதனை செய்தபோது, அங்கு பெண்களை பாலியல் தொழில் நடத்தியதாக கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, மசாஜ் சென்டரின் உரிமையாளர் பிரேமா என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது. மேலும், பாலியல் தொழிலுக்காக தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மீட்கப்பட்டனர்.

பிரேமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட மூன்று பெண்களும் மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் காரின் பின்னால் சென்ற அமைச்சரின் கார் விபத்து.. 60 வயது முதியவர் பலி..!

ஆழ்கடலில் மோதிரம் மாற்றி திருமணம் செய்த காதல் ஜோடி! விழிப்புணர்வு ஏற்படுத்த என பேட்டி..!

பசுவின் சிறுநீரில் மருத்துவ குணம் இருந்தால் மெடிக்கல் கம்பெனி சும்மா இருக்குமா? மருத்துவர் அமலோற்பவநாதன்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வெண்கல விருது.. சிறந்த பாதுகாப்பு செயல்திறனுக்காக அறிவிப்பு..!

கும்பமேளாவில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம்.. அமைச்சர்கள் புனித நீராடவும் திட்டம்..!

அடுத்த கட்டுரையில்