Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தை சுற்றிவந்த பெண் : மயங்கி விழுந்த மர்மம் என்ன..?

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (17:32 IST)
கிழக்கு தாம்பரம் ஆனந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் தேவராஜ் இவரது மகள் மகிமா (18)  தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ - மாணவிகள் கட்டாயம் விளையாட வேண்டும் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.
 
ஆனால் நேற்று மாலையில் கல்லூரியில் கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றுள்ளது. ஆனால் மகிமாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அதில் பங்கேற்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
 
இருப்பினும் அவரைக் கட்டாயப்படுத்தி கைப்பந்து விளையாட வைத்து உள்ளனர். அவர் மைதானத்தை சுற்றி வந்து பயிற்சியில் ஈடுபட்ட சிலநிமிஷத்திலேயே அவருக்கு மூச்சு திணரல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவியர் மகிமாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
 
இதனையடுத்து சம மாணவ - மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக கல்லூரியில் யாரையும் இனிமேல்  விளையாடுமாறு வற்புறுத்தக் கூடாது என கோஷம் எழுப்பி மகிமாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
 
மகிமா உரியிழந்ததால் கல்லூரியில் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments