Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியாகராஜன் மீதும் மீடூ புகார்: ''பொன்னர் சங்கர் படத்தின் போது நடந்தது என்ன?

Webdunia
சனி, 20 அக்டோபர் 2018 (20:54 IST)
நடிகர் பிரசாந்த் நடிப்பில் கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் இயக்குனர் தியாகராஜன் இயக்கிய திரைப்படம் 'பொன்னர் சங்கர்'. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தனக்கு இயக்குனர் தியாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் தனது சமுக வலைத்தளத்தில் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.

'பொன்னர் சங்கர்' படத்தில் தான் போட்டோகிராபராக பணிபுரிந்ததாக கூறும் பிரித்திகா மேனன் என்ற இளம்பெண் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 'மீடூ' ஹேஷ்டேக்கில் பதிவு செய்துள்ளார். தாய்லாந்து நாட்டின் அழகிய பெண்கள் தனக்கு மசாஜ் செய்ததாக கூறி அதன் புகைப்படங்களை தன்னிடம் அவர் காட்டியதாகவும், அந்த பெண்களுடன் தான் உல்லாசமாக இருந்ததாக அவர் கூறியதாகவும், அந்த சமயத்தில் தனக்கு உடம்பெல்லாம் கூசியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து நள்ளிரவில் வந்து கதவை தட்டியதாகவும் இதனால் தான் இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் இருந்ததாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மீடூ ஹேஷ்டேக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு வரும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்