சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவனை ஒன்று அறுவை சிகிச்சையின் போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
சென்னை பெருங்குடியில் இயங்கிவரும் பிரபல மருத்துவமனை ஒன்றிற்கு மேற்கு வங்கத்தை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபரின் மகளுக்கு கால் மூட்டில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த 6 ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது அந்த பெண்ணுக்கு இடுப்புக்கு கீழ் உணர்விழக்க செய்யும் மருந்து செலுத்தப்பட்டு, முகத்தில் செயற்கை சுவாச கருவி பொறுத்தப்பட்டது. அதோடு, இடுப்புக்கு மேல் குறுக்காக திரைசீலை போடப்பட்டது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மருத்துவனமை ஊழியர் ஒருவன், பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடந்துக்கொண்டிருக்கும் போது தலை பக்கமாக நின்றுக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
செயற்கை சுவாச கருவி மாட்டப்பட்டிருந்ததால் அந்த பெண்ணால் சத்தமிட இயவில்லை. பின்னர் அறுவை சிகிச்சை முடிந்தது அங்கு பணிபுரியும் சக ஊழியர்களிடமும், மருத்துவமனை நிர்வாகத்திடமும் இது குறித்து புகார் அளித்துள்ளார். ஆனால், இந்த புகாரை அவர்கள் கண்டுக்கொள்ளாத நிலையில் ஆன்லைன் மூலம் சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்துள்ளார்.
காவல் துறையினர் உடனடியாக விசாரணைக்கு சென்ற போது மருத்துவமனை தரப்பில் அந்த பெண் மனநல நோயாளி என கூறி போலீஸாரை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். தனக்கு நேர்ந்த துன்பத்திற்கு நீதி வெண்டும் என அந்த பெண் மருத்துவமனையை விட்டு வெளியேற மாட்டேன் என போராட்டம் நடத்தினார்.
இதனால் இந்த பிரச்சனை பெரிதாக மீண்டும் போலீஸார் அந்த பெண்ணின் மருத்துவ அறிக்கை முதல் அனைத்தையும் விசாரிக்க உண்மை அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவனமை ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த நபர் மட்டுமல்லாது, நற்பெயர் கெட்டுவிடுமோ என தவறுக்கு துணை போன மருத்துவமனை நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.