விம்கோ நகர் - விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (10:21 IST)
விம்கோ நகரிலிருந்து விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை விமான நிலையம் முதல் கோயம்பேடு வரை  மெட்ரோ ரயில் சேவை இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் செல்லும் பயணிகள் கோயம்பேடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விம்கோ நகர் - விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணியில் மெட்ரோ நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
எனவே விம்கோ நகர் செல்லும் பயணிகள் தற்போது கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உதாரணமாக தேனாம்பேட்டையில் இருந்து விம்கோ நகர் செல்ல வேண்டும் என்றால் சென்ட்ரல் வழியாக எளிதாக போய்விடலாம்
 
ஆனால் தற்போது ஆலந்தூர் சென்று கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வந்து மீண்டும் விம்கோ நகர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments