Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை ரயில் தீவிபத்தில் இறந்தவர்களின் உடல்கள்.. லக்னோவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு..!

Advertiesment
madurai rail accident
, ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (08:04 IST)
மதுரை ரயில் நிலையத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியான ஒன்பது பேர்களின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இங்கிருந்து விமானம் மூலம் லக்னோவுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.  ’
 
கேஸ் சிலிண்டர் காரணமாக ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒன்பது பேர் உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தனர்.  
 
இந்த நிலையில் உயிரிழந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு மதுரையிலிருந்து சென்னை கொண்டுவரப்பட்டது. மூன்று ஆம்புலன்ஸ்களில் ஒன்பது உடல்கள் சென்னை வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.15 மணிக்கு லக்னோ விமானத்தில் 5 உடல்கள்  அனுப்பி வைக்கப்படுவதாகவும் 11.15 மணிக்கு மற்றொரு விமானத்தில் நான்கு உடல்கள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
இது குறித்து ஏற்பாடுகளை ரயில்வே துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலை உணவுத்திட்டம் காப்பியடிக்கப்பட்ட திட்டம்: தமிழிசை செளந்திரராஜன்..