Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பதவியை பிடித்த பாமக ! திமுகவுடன் மீண்டும் கைகோர்க்குமா ?

பதவியை பிடித்த பாமக ! திமுகவுடன் மீண்டும் கைகோர்க்குமா ?
, வியாழன், 25 ஜூலை 2019 (16:00 IST)
கடந்த 1989 ல் பாட்டாளி மக்கள் கட்சியை மருத்துவர் ராமதாஸ் துவங்கினார். பாமகவை பெரும்பாலும் சாதியக் கட்சியாகப் பார்க்கிறவர்களும் உண்டு. அதிலும் உழைக்கிற மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கட்சி என்று போற்றிப்பேசுகிறவர்களும் உண்டு. ஆனால் காடுவெட்டி குரு இருந்தவரைக்கும் அவரது மேடைப் பேச்சுகள் அனைத்திலும் சாதியைத் தூக்கிப் பிடிப்பதாகவே இருந்தது.

அதற்கு பின்னர், திமுக , அதிமுக ஆகிய இருகட்சியிலும் மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்ட பாமக தன் அரசியல் நிலைப்பாட்டை நடத்திவருகிறது. திமுகவுடனான கூட்டணியில்தான் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் (204- 2009)  சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவியேற்று  சிறப்பான பல நல்ல திட்டங்களை இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் அறிமுகம் செய்தார்.

கடந்த 2014 ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாகம சார்பில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட சின்னய்யா என்கிற அன்புமணி ராமதாஸ் அமோகமாக வெற்றி பெற்று எம்பியானார்.

அதன்பின்னர், ஜெயலலிதா தலைமையிலான  ஆட்சி இரண்டாம் முறை பதவியேற்ற சில மாதங்களிலேயே அவர் மரணமடைந்தார்.அதனைத்தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அதிமுக கட்சியையும், அமைச்சர்களையும் வாய்க்கு வந்தபடி எல்லாம் (டயர் நக்கி ) பேசி, மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று அவர் தந்தை ராமதாஸுடன் சேர்ந்து குரல் கொடுத்தார். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற (2019 ) மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கைகுலுக்கு கூட்டணி வைத்து 7 மக்களவை மற்றும் 1 ராஜ்யசபா தொகுதிகளை அடம்பிடித்து பெற்றது.ஆனால் ஒன்றில் கூட ஜெயிக்கவில்லை.

இதெல்லாம் போக தற்போது கூட்டணி தர்மபடி அதிமுக கொடுத்த வாக்குறுதியாக அன்புமணிக்கு ராஜ்யசபா எம்பி பதவியை கொடுத்துள்ளது ( இன்னும்பதவியேற்கவில்லை ).
இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் பாமக தலைவர் ராமதாஸுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :
webdunia

பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். ‘முத்து விழா’வினைக் கொண்டாடும் ராமதாஸ் சிறப்பான உடல்நலனுடனும், நிறைவான மனவளத்துடனும், நீண்ட காலம் வாழ, வணக்கத்துடன் வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மதுவிலக்கு, நீட் தேர்வு போன்றவற்றிற்கு மத்திய - மாநில ஆளுங்கட்சிகளிடம் குரல் கொடுத்துவரும் பாமக , திமுகவின் பக்கம் தலைசாய்க்குமா என்ற கேள்வியை இன்றைய ஸ்டாலினின் வாழ்த்து எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசால்ட்டாய் தப்பிய பூமி: கடந்து போனது ஆபத்தான விண்கற்கள்!!