Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கல்வராயன் மலைப்பகுதிக்கு செல்வீர்களா.? முதல்வருக்கு தமிழக பாஜக கேள்வி.!!

Annamalai Stalin

Senthil Velan

, வியாழன், 25 ஜூலை 2024 (16:59 IST)
கள்ளச்சாராய மரணங்களின்போது, ஒருமுறை கூட அப்பகுதிக்கு சென்று மக்களை சந்திக்கவில்லை என்றும் உயர்நீதிமன்றமே வலியுறுத்திய பிறகாவது, கல்வராயன் மலைப் பகுதி மக்களை சந்தீப்பீர்களா என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
 
இது தொடர்பாக தமிழக பாஜகவின் ‘என் மண் என் மக்கள்’ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இன்னும் உங்களுக்கு கள்ளக்குறிச்சிக்கு செல்ல வழி தெரியவில்லையா முதல்வர் மு.க.ஸ்டாலின்? கல்வராயன் மலைக்கு சென்று அப்பகுதி மக்களை சந்தியுங்கள் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை வலியுறுத்தியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
 
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் நடந்த கள்ளச் சாராய மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியது. அச்சம்பவத்தின் எதிரொலியாக அப்பகுதி மக்களின் சமூக பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. 
 
இதனை விசாரித்த நீதிபதிகள், சுற்றுலாத் தலத்துக்கு உகந்த பகுதியாக திகழும் கல்வராயன் மலைப்பகுதியில், சாராயம் காய்ச்சுவதை மட்டுமே முக்கியத் தொழிலாகக் கொண்ட அம்மக்களின் மறுவாழ்வுக்கான தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். 

எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் உடன் சென்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். 

 
தமிழகத்தையே உலுக்கிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின்போது, நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை கூட அப்பகுதிக்கு சென்று மக்களை சந்திக்கவில்லை. ஆனால், இன்று உயர் நீதிமன்றமே வலியுறுத்திய பிறகாவது, கல்வராயன் மலைப் பகுதி மக்களை சென்று சந்தீப்பீர்களா முதல்வர் ஸ்டாலின்? என்று தமிழக பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்., ஜெயகுமாரின் அதிர்ச்சி பதிவு..!