Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வக்ஃப் திருத்த மசோதாவை திரும்ப பெற வைப்போம்: ஜவாஹிருல்லா ஆவேசம்

Siva
ஞாயிறு, 29 ஜூன் 2025 (13:47 IST)
விவசாயிகளின் போராட்டம் காரணமாக வேளாண் மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற்றது போல், நாங்கள் போராட்டம் செய்து வக்ஃப் திருத்த மசோதாவையும் திரும்ப பெற வைப்போம்" என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வக்ஃப் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, ஜூலை 6ஆம் தேதி மதுரையில் எழுச்சிப் பேரணி நடைபெற உள்ளதாகவும், இதில் 5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகியும், சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
 
வக்ஃப் திருத்தச் சட்டம் தீய நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதாகவும், உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்களின் இடங்கள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டது என்றும், வக்ஃப் திருத்தச் சட்டம் மற்றொரு புல்டோசர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
இச்சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த சட்டத்தை தொடர் போராட்டங்கள் நடத்தி திரும்பப் பெற வைப்போம் என்றும், வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற்றது போல் மத்திய அரசு வக்ஃப் திருத்த சட்டத்தையும் திரும்ப பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments