பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதாக திருமாவளவன் கூறிவரும் நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப் பட்டிருக்கும் நிலையில் அவருடைய ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வியாக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்
இந்த நிலையில் பாஜக அதிரடியாக பழங்குடியின பெண் திரெளபதி முர்மு என்பவரை குடியரசு தலைவர் போட்டியாளராக நிறுத்தி உள்ளது. இதனை அடுத்து திருமாவளவன் அவருக்கு ஆதரவு கொடுப்பாரா? அல்லது அரசியல் செய்வாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்