Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா..? தமிழகம் முழுவதும் ஐ.டி ரெய்டு..!!

income tax raid

Senthil Velan

, வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (17:22 IST)
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
 
சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள ஒரு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பழையபாளையத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
 
திருப்பூர் அவிநாசியில் குடிநீர் வடிகால் வாரியத்தின் ‛ அ' பிரிவு, ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரின் வீடுகள் மற்றும் அவரின் பெட்ரோல் பங்க், ஆர்.ஓ., வாட்டர் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 


திருநெல்வேலி சாலை பணி ஒப்பந்ததாரரும் அதிமுக பிரமுகருமான ஆர் எஸ் முருகன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஆர்.எஸ்.முருகனின் அலுவலகம், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொத்து கொத்தாக மடிந்த பென்குயின்கள்..! அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல் வைரஸ்..!!